என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » தண்ணீர் திருட்டு
நீங்கள் தேடியது "தண்ணீர் திருட்டு"
முல்லைபெரியாற்றில் மோட்டார் மூலம் தண்ணீர் திருடும் கும்பலை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கூடலூர்:
முல்லைபெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் குடிநீர் ஆதாரமாகவும் திகழ்கிறது. தற்போது மழைப்பொழிவு குறைந்துள்ளதால் முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது.
தண்ணீர் வரத்து முற்றிலும் நின்றுபோய் உள்ளது. கடந்த 16-ந்தேதி வரை 100 கனஅடிநீர் மட்டுமே திறக்கப்பட்டது. ஆனால் இந்த தண்ணீர் உத்தமபாளையம் பகுதிவரை கூட செல்லவில்லை. எனவே தண்ணீர் திறப்பை 170 கனஅடியாக உயர்த்தினர். இருந்தபோதும் முல்லை பெரியாற்றில் நீர்வரத்து குறைந்தே காணப்பட்டது.
அப்பகுதியில் உள்ள கும்பல் மின்மோட்டார் மூலம் தண்ணீரை திருடி வருவதால் வைகை அணைக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுப் பணித்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து உத்தமபாளையம், வீரபாண்டி பகுதிகளில் தண்ணீர் திருட பயன்படுத்திய மின்மோட்டார்களை பறிமுதல் செய்தனர்.
ஆனால் கம்பம், கூடலூர் பகுதியில் ஆய்வு செய்யவில்லை. இங்குதான் அதிகளவில் தண்ணீர் திருடப்படுகிறது.
எனவே அதிகாரிகள் இப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 113.45 அடி. வரத்து இல்லை. திறப்பு 170கனஅடி. வைகை அணை நீர்மட்டம் 44.43அடி,
வரத்து இல்லை, திறப்பு 60 கனஅடி. மஞ்சளாறு அணை நீர்மட்டம் 33.75, வரத்து இல்லை, திறப்பு 10. சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 94.62 அடி, வரத்து இல்லை, திறப்பு 3 கனஅடி. மழை எங்கும் இல்லை.

திண்டுக்கல்லில் மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்த வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்புகளை அதிகாரிகள் துண்டித்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட 48 வார்டுகளில் ஆத்தூர் காமராசர் அணை மூலம் பெறப்படும் தண்ணீரைக் கொண்டு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது அணையில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது.
பல இடங்களில் மழை பெய்த போதும் திண்டுக்கல் மாவட்டத்தில் போதிய மழை இல்லாததால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் நகர மக்களுக்கு 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் அதிலும் பேரிடியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையின் போது கரூர் மாவட்டம் நெரூர் பகுதியில் உள்ள காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட பகுதியில் வெள்ளத்தில் மோட்டார் அடித்து செல்லப்பட்டது.
இதனால் காவிரி கூட்டுக் குடிநீர் மூலமும் தண்ணீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது 20 நாட்களுக்கு மேல் ஆகியும் பல பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் திண்டுக்கல் மக்கள் விலைக்கு வாங்கி தண்ணீரை பயன்படுத்துகின்றனர்.
மேல்நிலை தொட்டிகளில் இருக்கும் குறைந்த அளவு தண்ணீர் வார்டு வாரியாக பிரித்து அனுப்பும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறைந்த அளவு தண்ணீரே வினியோகம் செய்யப்படுவதால் 1 மணி நேரம் கூட முழுமையாக தண்ணீர் வினியோகம் செய்ய முடியவில்லை.
இதனால் பல வீடுகளுக்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. பல வீடுகளில் மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சப்படுவதாகவும் புகார்கள் வந்தது. நேற்று குடிநீர் வினியோகம் செய்யப்பட்டபோது மாநகராட்சி பொறியாளர் மனோகர் உத்தரவின் பேரில் பொறியாளர்கள் மாரியப்பன், சாமிநாதன் தலைமையிலான அலுவலர்கள் குமரன் திருநகர், ஆண்டாள்நகர், ஜி.டி.என்.சாலை உள்ளிட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மோட்டார் வைத்து தண்ணீர் எடுத்த 10 வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கையில், மோட்டார் வைத்து தண்ணீர் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.
இது குறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில், மாநக ராட்சியாக உள்ள திண்டுக்கல்லில் 20 நாட்களுக்கு ஒரு முறை கூட குடிநீர் வினியோகம் சீராக கிடைப்பதில்லை. தமிழகத்தில் எந்த மாநகராட்சியிலும் இது போன்ற நிலை இருக்காது. ஆனால் குடிநீர் வரி மட்டும் தவறாது வசூலித்து விடுகின்றனர். ஊராட்சி, பேரூராட்சிகளில் கூட தண்ணீர் கிடைக்கும் நிலையில் மாநகராட்சி அந்தஸ்து பெற்ற திண்டுக்கல்லுக்கு குடிநீர் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் வினியோகம் செய்யும் போது மோட்டார் வைத்து எடுக்காவிடால் 10 குடங்கள் கூட கிடைப்பதில்லை. இதன் காரணமாகவே பெரும் பாலான வீடுகளில் மோட்டார் பயன்படுத்தப்படுகிறது. பல வீடுகளுக்கு தண்ணீரும் முறையாக கிடைப்பதில்லை என்று தெரிவித்தனர். #tamilnews

×

X